Monday, September 8, 2008

வெளிநாட்டுக் கல்வி!

வழக்கம்போல ஒரு வணக்கம் போட்டுக்கிறேன்! :-)

நீண்ட நாள்களாக தேடியும், மற்றவர்களிடம் வினவியும், பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு (நெசமாவா?!) இதை எழுதுகிறேன்.

எனக்குள் தோன்றிய பல வினாக்களில் இதுவும் ஒன்று.

இந்தியாவில் அத்தனை கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இருக்கும் நிலையில், மாணவர்கள் ஏன் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க ஆசைப்படுகிறார்கள், படிக்கிறார்கள்?

ஒரே வார்த்தையிலோ அல்லது, ஒரே வரியிலோ என்னால் விடையளிக்க முடியும். ஆனால் அது தவறாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

நான் தமிழகத்தில், திருச்சியில் இளநிலை படித்தவன். பின்னர், மேல்படிப்பில் ஆர்வமில்லாத்தால் (இளநிலையில மட்டும் ஆர்வம் இருந்தாமாதிரி !), படிக்கவில்லை.

வேலை தேடினேன், கிடைத்தது. இன்னும் பணியில் இருக்கிறேன். என்னுடன் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலிருந்தும், இந்தியா மற்றும் வெளிநாட்டில் பயின்ற பலர் பணிபுரிகிறார்கள்.

முக்கியமாக இந்திய மாணவர்கள் மேல்படிப்புக்காக மட்டுமே வெளிநாடு செல்கின்றார்கள்.

வெளிநாடுகளுக்கு மேற்கல்வி பயில செல்வதற்கான காரணங்கள், அங்கு சென்று படிப்பின் சிறப்பம்சங்கள் இதோ உங்களுக்காக...

காரணங்கள்:

  1. மாணவர்கள் தங்களின் தனித்திறமைக்கேற்ப எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் கிடைக்காமை
  2. எதிர்பார்த்த பாடங்கள் கிடைக்காமை
  3. மற்ற கல்லூரிகளில் இடம் கிடைத்து, அதில் படித்து முடித்ததும் வேலை கிடைக்காமை
  4. அப்படியே வேலை கிடைத்தாலும், சம்பளக்குறைவு (தனியார் கல்லூரி என்பதால்!)
  5. மேல் படிப்பாவது நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தால்
  6. வெளிநாட்டு மோகம்
இப்படி காரணங்கள் ஏராளம்.

இதன் சிறப்பம்சங்கள்:

1. நம் நாட்டில் தொழில் சார்ந்த கல்வி முறை உள்ளது, ஆனால் தொழில் கூடங்களுடன் ஒருங்கிணைந்த கல்வி முறை கிடையாது. வெளிநாடுகளில், எல்லா கல்வி நிறுவனங்களும் பல தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

2. இவ்வாறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதனால், ஒரு மாணவர் படித்துக்கொண்டிருக்கும் போதே, அந்த நிறுவனத்தில் வேலை பார்க்க வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதனால் படிக்கும் போதே போதிய அனுபவம் கிடைக்கின்றது.

3. அதுமட்டுமல்லாது, அப்படி வேலை பார்க்கும் காலத்தில் மாணவர்களுக்கு பணச்சுமையும் குறைகிறது.

4. ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்றில்லாமல், ஒரு மாணவரே அந்த பாடத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார். இச்செயல், அந்த மாணவருக்கு அந்த பாடத்தில் இருந்த அறிவுத்திறனை அதிகப்படுத்தும்.

5. வெளிநாடுகளில்தான் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என எல்லாமே வெளிநாடுகளில்தான் ஆரம்பிக்கின்றன. இதனால் மாணவர்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்திற்கு ஏற்றார்போல் பாட திட்டங்கள் அமைக்கப்படுகின்றன.

6. மாணவர்களுக்க போதிய அளவில் கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சென்று சேர்கின்றன.

7. கல்விக் காலம் மாணவர்களால் நிச்சயிக்கப்படுகின்றது.

8. பாடங்களும் மாணவர்களால் நிச்சயிக்கப்படுகின்றது. வேண்டிய பாடங்களை எடுத்து விரும்பி படிக்கலாம்.

9. பேராசிரியர்கள், அதிகம் படித்தவர்களாகவும், ஆராய்ச்சி வல்லுனர்களாகவும் இருக்கின்றனர். ஆகையால் மாணவர்களின் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.

10. படித்துக்கொண்டிருக்கும்போதே மாணவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கின்றது.

மேலும் விவரங்கள் அறிய பின்னூட்டமிடுங்கள்.

அப்பால பாக்கலாம்!

0 comments: