Monday, September 15, 2008

மன மாற்றம்!

6 ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவை விட்டு தாய்நாட்டுக்கு சென்றுவிடலாம் என்று என்னி ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்கின்றேன்.

இந்த நேரத்தில், பெங்களூரு, அஹமதாபாத், டெல்லி என்று எல்லா ஊர்களிலும் வெடிகுண்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் எத்துனை காரணங்களை முன்வைத்து, என் முடிவை எடுத்தேனோ, என் மனதை மாற்றி, அமெரிக்காவோ, அல்லது எந்த ஒரு அன்னிய நாடோ வேண்டாமென்று இருந்தேனோ அந்த மனதில் இப்போது விடை தெரியாத 
பல கேள்விகள் தோன்றியுள்ளன.

நான் படித்தேன், வேலை கிடைத்தது, என் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என்று அளவோடு வாழ்ந்து வருகிறேன்.

முதல் கேள்வி: நானும், என் குடும்பமும், என்னை சார்ந்தவர்களும், ஏன் 'குண்டு' வெடிப்பில் இறக்க வேண்டும்?

நான் செய்த தவறு என்ன?

இந்தியனாகப் பிறந்ததா?

1993 ல் பம்பாயிலும், 1998 ல் கோயம்புத்தூரிலும், தொடங்கி, இன்றுவரை பெங்களூர், பார்லிமென்டு கட்டடம், மீண்டும் பெங்களூர், அஹமதாபாத், டெல்லி என்று தீவிரவாதத்தின் வேலைப்பாடுகள் அதிகரிக்க ஆரம்பத்துள்ளது.

இனி அடுத்து எந்த ஊரில், எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற அச்சம் மக்களின் மனத்தில் ஆழப்பதிந்துள்ளது.

யார் காரணம்: 

நான் எந்த ஒரு மதத்தையோ அல்லது இனத்தையோ குறை கூறவில்லை. அரசாங்கப்பணியில் உள்ளவர்களும், அரசியல்வாதிகளும் அவர்களுடைய கடமையை அறியாமல் இருப்பதே இதற்கு காரணம்.

குற்றம் செய்தவன் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக்கொள்ளும் வேளையில் அவனுக்கு தக்க தண்டனை கொடுக்கும் நீதி மன்றம், இப்படிப்பட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க தாமதப்படுத்துவது ஏன்?

நீதிமன்றங்கள் இன்று நிதி மன்றங்கள் ஆகிவிட்டன என்று ஒரு கவிதை வரி உள்ளதை நான் இங்கே நினைத்துப்பார்க்கின்றேன்.

உண்மைதான்.

பல சங்கதிகளை, பலமுறை அலசி ஆராய ஆரம்பித்ததின் பலன், மீண்டும் அமெரிக்கவிலேயே தங்கிவிடலாமா என மனதை வினவிக்கொண்டுள்ளேன்.

எந்த ஒரு மனிதனுக்கும், அவனது அடிப்படை தேவைகளான, உணவு, உடை, உறைவிடம் கிடைத்தால் அவன்தான் உலகத்தில் அதிக மகிழ்ச்சி அடைபவன்.

ஆனால் இன்று அவைகள் இருந்தும், அடுத்த வினாடி எங்கு குண்டு வெடிக்குமோ என்றென்னும்போது, இருக்கும் இடத்தை விட்டு எங்கும் போக, தாய்நாட்டிற்கும் சேர்த்துதான், மனம் தயக்கம் கொள்கிறது.

பாதுகாப்பில்லா வாழ்க்கையில் பணமிருந்தும் என்ன பயன்?

4 comments:

Sathia said...

கடுமையான தண்டனைகளும், விரைவான நீதியும் இல்லாத வரை நிலைமை இப்படித்தான் இருக்கப்போகிறது. இதோடு தொடர்புபடுத்தி பார்த்தால் ஆங்காக்கே மக்களே சட்டத்தை கையில் எடுக்க ஆரம்பிப்பபதால் இன்னும் அதிக அளவில் குற்றங்கள் நிகழ்கின்றன. நமது சட்டத்துறை தொழில்நுட்பத்தை வேகமாக பயன்படுத்த வேண்டிய காலமிது.

தமிழரசன் said...

தொழில்நுட்பம் இல்லாமல் இல்லை. ஆனால், அதை பயன்படுத்த வேண்டும்.

ஓட்டுக்காக மக்களை மாக்களாக மாற்றி பிச்சை எடுக்கும் அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து தீவிரவாதிகள் தினம் தினம் சக்கரைப்பொங்கல் வாங்கி தின்று சந்தோஷமாகத்தான் இருக்கின்றார்கள்.

புகழன் said...

ஒவ்வொரு இந்தியனையும் நிலைகுலையச் செய்யும் மாபாதகச் செயல்கள்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
மிகவும் அருமையான பதிவு.
நியாயமான கேள்விகள்
ஆனால் அதற்கான விடைகூற முற்படும் பொழுது ஆழ்ந்து சிந்தித்தால் நீங்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு
//
குற்றம் செய்தவன் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக்கொள்ளும் வேளையில் அவனுக்கு தக்க தண்டனை கொடுக்கும் நீதி மன்றம், இப்படிப்பட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க தாமதப்படுத்துவது ஏன்?
//
கீழ் வரும் விடைதான் சரியானதென நினைக்கிறேன்.

தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யார் என்பதையே இன்னும் சரியாகக் கண்டுபிடிக்கவில்லை.

ஏதோ பெயரளவில் தானும் வேலை செய்கிறேன் என்பதற்காகவும் பதக்கங்களையும் ஸ்டார்களையும் தஙகள் சட்டைக் காலரில் ஏற்றிக் கொள்வதற்காக அப்பாவி பொதுமக்களை பிடித்து தீவிரவாதிகள் எனக்கூறி முடிந்தால் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்வது வாடிக்கையாகி விட்டது.

ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் போதும் இவர்கள் தான் குற்றவாளிகள் என்று 4 பேரை பிடிப்பது. பின் அதில் இருவரை சுட்டுக் கொன்று விடுவது. இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

உண்மையாகவே உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்தால் குண்டுவெடிப்புகள் நிகழாது.

ஆனால் கைது செய்ய இந்த அரசியல் பயங்கரவாதிகள் (இதில் எல்லாக் கட்சியினரும் அடங்குவர்) இடம் கொடுப்பதில்லை.

தமிழரசன் said...

நன்றிகள் புகழன்! இருப்பினும் நான் இப்போது தமிழகம் வந்துவிட்டேன்!