இப்படிக்கூறுபவர்கள் யார்? என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? இவர்களால் ஏன் இந்த விலையேற்றங்களைப் பொருத்துக் கொள்ள முடியவில்லை? இவர்கள் செய்கின்ற வேலைக்கு சம்பளம் இல்லையா? குறைவா? ஏன் குறைவு? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள். ஒவ்வொன்றிற்கும் உரிய விடையளித்தால், அதுவே தொடர்கதையா எழுதலாம்.
மென்பொருள் துறையை ஊக்குவிப்பதன் மூலம் யாருக்கு இலாபம் என்ற வினாவிற்கான விடைதான் மற்ற துறைகளின் சரிவிற்கான காரணம்.
எந்த துறையிலும் செய்ய முடியாத அளவிற்கு செலவு செய்யும் துறை மென்பொருள் துறை என்றால் அது மிகையாகாது. காரணம், வெளிநாட்டு முதலீடு.
வெளிநாட்டு நிறுவனங்களும், அவர்களை நம்பி நம் நாட்டு நிறுவனங்களும், அவர்களுக்கு வருகின்ற லாபத்திற்கேற்றவாறு, ஊதியங்களை அளித்து வருகின்றனர்.
இவற்றின் மூலம், இளைஞர்கள் தாம் எண்ணியவாறு செலவு செய்ய வகை செய்யப் படுகிறது. எந்த பொருளுக்கும், எந்த ஒரு விலையும் தரத் தயாராக உள்ளனர். இதனால் ஏற்படும் விலையேற்றமானது, பொருளின் உற்பத்தியாளரைச் சென்றடையாமல், இடைத் தரகர்களுக்குச் சென்றடைகின்றது. இதுதான் இனைறைய மோசமான நிலை.
இதனைப் போக்க, மென்பொருள் துறை தவிர, மற்ற துறைகளிலும், அரசு கவனம் செலுத்த வேண்டும். எந்த துறைகள்? கீழே காண்போம்.
விவசாயம்:
உடுக்க உடையில்லாமலும், இருக்க இடமில்லாமலும் உள்ள மக்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், எப்போதும் அவர்களின் குரல் மட்டும் உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என்பதுதான்.
அப்படிப்பட்ட உணவு உற்பத்தி செய்யும் துறையானது இன்று மிகவும் நலிந்துள்ள நிலையில் இருப்பதை நாம் அறிவோம். பணம் இருந்தால் எதனையும் வாங்கி விடலாம் என்ற அரேபியக் கொள்கையில் ஆழ்ந்துள்ள இந்தியாவின் எதிர்காலமே இன்று கேள்விக்குறியாகியுள்ள நிலை.
இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 62 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. சுதந்திரத்திற்கு முன்தான் வெள்ளையர்களால் இந்தியாவின் வளம் சுரண்டப்பட்டது என்று கூறி போராட்டம் செய்து சுதந்திரம் வாங்கிவிட்டோம். ஆனால் இன்று இந்தியாவின் நிலை என்ன?
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றும், விவசாயிகள் என்றும் பல வண்ணங்களில் உடையணிந்து கொண்டு பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்.
விவசாயிகளின் நிலையும், விவசாயத்தின் நிலையும் இன்றும் அப்படியே உள்ளது என்பதுதான் வருத்தமான உண்மை.
விவசாயத்திற்கென தனியே பிரத்தியேகமான ஒரு அமைச்சகம், ஒரு அமைச்சர், அவருக்கு பல ஆட்சிப்பணி பொருப்பில் உள்ள அறிவுள்ள அரசு ஆலோசகர்கள், அறிவியல் வல்லுனர்கள் என்றெல்லாம் இருந்தும், 62 ஆண்டுக்குப் பின்னும், ஆண்டிற்கு 4% வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று இணையத் தளத்தில் இட்டுள்ளார்கள்!
அப்படியென்றால், இன்னும் 4% வளர்ச்சி கூட இல்லை என்பதுதானே உண்மை?!
இந்த நிலை மாற வேண்டும். இருக்கின்ற நிலங்களை மனைகளாக மாறவிட்டு, இயற்கை வளங்களை இருட்டான கட்டடங்களாக மாற்றும் நிலை மாற வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையை அரசு உருவாக்கித் தர வேண்டும்.
விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டும் விவசாயம் வளர்ந்து விடாது. அவர்களின் விளைச்சலுக்க ஏற்ற விலை அளிக்கப் பட வேண்டும். இன்றைய கால கட்டத்தில், இடைத் தரகர்களின் பிடியில் இருந்து விவசாயப் பொருள்கள் விடுபட வேண்டும். அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து, அதன் மூலம், சராசரியான, நியாயமான விலையை நிர்ணயித்து, பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாயம் செய்பவர்களுக்கு நம்பிக்கை வரும்படி இப்படிப் பட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
வறட்சி ஒரு பெரிய காரணமாக உள்ளது. விவசாய ஆராய்ச்சியில் அதிக கவணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியைத் தாங்கக் கூடிய அளவில், விளை பொருள்களை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை அரசு மான்யத்துடன் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு செய்தாலன்றி இந்தியாவில் விவசாயம் என்பது அதிசயமாகிவிடும்.
கல்வி:
உலகலவில், கல்வியில் நல்ல இடத்தில் உள்ள சில நாடுகளில், இந்தியாவும் ஒன்று. மென்பொருள் துறையில் மாற்றம் வந்துவிட்டதாலும், இந்தியாவில் இளைஞர்கள், அதிக அளவில் சம்பளம் பெறுவதாலும், இந்தியாவின் கல்வித்துறையானது வளர்ந்துவிட்டது என்று பொருள் இல்லை.
சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் அடைந்துள்ள நிலையில், நம் நாட்டின் கல்வித்தரத்தின் அளவு மட்டும் அதிகரிக்க வில்லை. கல்வித் தரம் மட்டுமல்ல, இன்றும், கல்வியறிவு பெற்றவர்களைப் பற்றி கணக்கெடுக்கும் நிலையும் உள்ளது. இதற்கு யாரோ ஒருவரைக் காரணம் சொல்லி விட முடியாது.
2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிக அளவு படித்தவர்கள் உள்ள மாநிலம், கேரளா (90.9%). தமிழகத்தின் சதவீதம், 73.4%.
ஒரு பக்கம் அடிப்படைக் கல்வி கற்க முடியாத நிலையில் மக்கள். மறுபுறம், அரசுப் பள்ளிகளிலும் அன்பளிப்பு வசூல் செய்யுமிடமாக மாற்றப்பட்டது. என்ன செய்வதென்று அறியாமல் தவிப்பவர்களோ மக்கள்.
இப்படிப்பட்ட சூழலில், படிப்பை தொடர்வதை விட, வேறு ஏதாவது செய்யட்டுமே என, தன் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களே அதிகம்.
சரி, அடிப்படைக் கல்விதான் அப்படி என்றால், மேல் கல்வியும் இப்படித்தான். ஒரு காலத்தில், தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் இருந்த பொறியியல் கல்லூரிகளால், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் மாணவர்கள் வந்து, அதிக அளவில் பணத்தைக் கொடுத்து படித்தனர். கல்லூரி முதலாளிகளோ, நல்ல அளவில் பணம் பார்த்தனர்.
இன்றோ, அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், பணக்காரர்கள் எல்லோரும் விழித்தெழுந்து பல கல்லூரிகளை நிறுவி விட்டனர். இதனால் இந்த ஆண்டு மட்டும், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம், 30,000 இடங்கள் காலியாக உள்ளன.
அரசாங்கம், பொறுப்புடன் செயல்பட்டு, இப்படிக் கண்டபடி, கண்ட கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்த வேண்டும். அடிப்படைக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கல்வித் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, வருகின்ற ஆண்டுகளிலாவது, இந்தியாவில் அனைவரும் கல்வி கற்றவர்கள் என்று அறிவிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை:
அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துகிறோம் என்று கூறி, இன்று அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசுபட்டுக் கிடக்கின்றது. சொகுசு என்ற பெயரில், அதிக அளவில் கட்டுப்பாடற்ற வாகனங்கள், அவைகளிலிருந்து வரும் புகை, மாசுவை அதிகப் படுத்துகின்றன.
இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என்று, தெருக்களில் இன்று நடக்க முடியாத நிலை மக்களுக்கு.
சாலைகளில் இரு புறங்களிலும் இருந்த மரங்களை வெட்டி, கட்டமைப்பிற்காக வெட்டினோம் என்று கூறுவது ஒரு புறம். காடுகளில், பொழுதுபோக்கிற்காக, வேட்டையாடி, பல விலங்குகளை கொன்று குவிக்கிறார்கள்.
காடுகளில் பலர், அரசியல் செல்வாக்குடனும், அரசு அதிகாரிகளின் செல்வாக்குடனும், மரங்களை வெட்டி சாய்க்கின்றார்கள்.
இவற்றையெல்லாம் தாங்காத இயற்கை இன்னொறு புறம், காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர்களில் காட்டு வளங்கள் நாசமாகின்றன.
உள்ளூர், வெளியூர் அன்றி, வெளி மாநிலங்களில் இருந்து வரும் தீவிரவாதிகளின் ஊடுறுவல்கள் போல பல சீரழிவுகள் இயற்கையை பாழ்படுத்துகின்றன.
அரசாங்கம், தனது அதிகாரிகளைக் கொண்டு, தற்போது இருக்கின்ற சட்ட திட்டங்களை அமல்படுத்தினாலே, சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை மிகவும் சீராகும்.
அரசாங்கம், தனது அதிகாரிகளைக் கொண்டு, தற்போது இருக்கின்ற சட்ட திட்டங்களை அமல்படுத்தினாலே, சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை மிகவும் சீராகும்.
சுகாதாரத்துறை:
இந்தியாவில் தீர்க்க முடிந்த 1000 பிரச்சினைகள் இருந்தால், அதில் தீராத பிரச்சினை இந்த சுகாதாரம்.
இன்று சிகிச்சை, மருந்து, போன்றவை அதிக பணம் வைத்துள்ளவர்களுக்கு மட்டும் என்று உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை வரை பணம், பணம்... சரியாக மருந்து இல்லை, மருத்துவர் வசதி இல்லாமை.
சுகாதாரத்துறையில் நல்ல முன்னேற்றத்தையும், சீர்திருத்தங்களையும் மிக தைரியமாகக் கொண்டு வந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அன்புமணி அவர்கள்.
ஐந்து ஆண்டுகளில் எல்லாமே நடந்துவிடாது. என்றாலும், 62 ஆண்டுகளாயும், இன்னும் போதிய வசதியில்லாத நிலை.
கிராமப்புற வளர்ச்சி:இன்று சிகிச்சை, மருந்து, போன்றவை அதிக பணம் வைத்துள்ளவர்களுக்கு மட்டும் என்று உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை வரை பணம், பணம்... சரியாக மருந்து இல்லை, மருத்துவர் வசதி இல்லாமை.
சுகாதாரத்துறையில் நல்ல முன்னேற்றத்தையும், சீர்திருத்தங்களையும் மிக தைரியமாகக் கொண்டு வந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அன்புமணி அவர்கள்.
ஐந்து ஆண்டுகளில் எல்லாமே நடந்துவிடாது. என்றாலும், 62 ஆண்டுகளாயும், இன்னும் போதிய வசதியில்லாத நிலை.
இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்களையும், அங்கு வசிக்கின்ற பெரும்பாலான விவசாயக் குடும்பங்களுக்கான வளர்ச்சி என்றால், அது அவர்களின் அறியாமையைப் போக்குவதாகும். அவர்கள் இன்றும், மூட நம்பிக்கையிலும், இருக்கின்ற அவர்களை மீட்டு விட்டாலே, கிராமங்கள் வளர்ச்சிப் பெற்றுவிடும். நான் விவசாயத் துறைத் தலைப்பில் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களும் இதற்குப் பொருந்தும்.
விவசாயம் மட்டுமன்றி, நெசவுத்தொழில், மட்பாண்ட உற்பத்தி போன்ற அனைத்து தொழில் வளர்ச்சிகளும் கிராமப்புற வளர்ச்சியே. இவைகளின் உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பது, அவைகளின் விற்பனைக்கு வழி வகுப்பது போன்ற நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளே, ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
முடிவுரை:
இப்படி எல்லாத் துறைகளுக்கும் ஐந்தாண்டுத் திட்டங்களிட்டும், அவற்றை சரியான முறையில் நிர்வகிக்காமல் அதிகமான துறைகள், இன்று துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன.
நிர்வாகத்திறமையும், அடிப்படை வசதிகளையும், அதற்கான ஒத்துழைப்பை மக்களும் அளிப்பின், மென்பொருள் துறை மட்டுமல்லாது, எல்லாத் துறைகளும் சிறந்து விளங்கும்.

1 comments:
ஆஹா மிகவும் அருமையான பதிவு !
Post a Comment