நம்மல்லாம் இன்னும் திருந்தவே இல்ல அப்படிங்கிறதுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டு! :)
பள்ளிக்கூடமாகட்டும், கல்லூரியாகட்டும், தேர்வுக்கு முந்திய நாள்தான் படிக்கிறது, எப்படியோ பாஸ் ஆயிடறது! (நம்புங்கப்பா :) )
அதே மாதிரிதான், மணற்கேணி போட்டிக்கு, ரொம்ப நாளா, பதிவு அனுப்பனும்னு நினைத்து, போட்டியின் இறுதி நாளுக்கு முந்தைய நாள்தான் அதை அனுப்ப முடிஞ்சிது. நாங்கல்லாம், லேட்டா அனுப்பினாலும், லேட்டஸ்ட்டா அனுப்புவோம்ல! (போட்டி முடிவு வரும்போது தெரியும் ஹி ஹி....)
நான் இரண்டு தலைப்புகளில் கட்டுரை எழுதி அனுப்பியுள்ளேன்.
1. அரசியல் மற்றும் சமூகம் என்னும் தலைப்பில், பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் என்ற கட்டுரையும்
2. அறிவியல் என்னும் தலைப்பில், மென்பொருள் துறை தவிற, இந்தியர்கள் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் என்ற கட்டுரையும்
அனுப்பியுள்ளேன்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் அனுப்பிய கட்டுரைகள் சிங்கைத் தமிழ்ப் பதிவர்களை சென்றடைந்து விட்டனவாம்! ஹைய்யா......
அதுவே ஒரு வெற்றதான்! இல்லையா பின்ன, இன்னைக்கு, நாளைக்குன்னு ஒரு வழியா அனுப்பிட்டோம்கிற திருப்திதான்!
கட்டுரைகளை ஏற்றுக்கொண்ட மணற்கேணி குழுமத்திற்கு ஒரு பெரிய நன்றி!
அப்புறம், போட்டி முடிவுகள் வெளிவந்ததும், என்னுடைய கட்டுரைகளை, நான், என்னுடைய வலைப்பதிவில் வெளியிடுகிறேன்.
அவ்ளோதானா, இல்ல, இன்னும் இருக்கு!
நான் இக்கட்டுரைகளை எழுதி அனுப்ப உறுதுணையாக இருந்த என் மனைவிக்கும், நான் தட்டுச்சு செய்யும்போதெல்லாம், நீமோ படம் போடு என்று அழுதும், நான் படம் போடாமல் தட்டிக்கழித்ததைப் பொறுத்துக் கொண்ட என் மகனுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்!
அப்பால, நம்ம சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி யின் இணைய முகவரிகள் இருக்கு, ஒரு சொடுக்கு, சொடுக்கிட்டு போங்க!

0 comments:
Post a Comment