Saturday, September 5, 2009

வைதீஸ்வரன் கோயிலும் வயித்தெறிச்சலும்!

நான், ஓவரா சாமி கும்பிடாதீங்க அப்படின்னா, நீங்க கேப்பீங்களா? பெரியார் சொன்னதையே நாங்க கேக்கல, இவரு வந்துட்டாரு ... அப்படின்னு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணிட்டு போயிடுவீங்க... இருந்தாலும் நடந்ததை சொல்றேங்க...

மாமா பையனுக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்லி, வைதீஸ்வரன் கோயில்ல இருக்கின்ற செவ்வாய்க்கு (சாமி) ஒரு அர்ச்சனை செய்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று யாரோ ஒரு ஜோசியக்காரன் சொன்னதை எனது மாமா என்னிடம் கூறினார்.

நான் எவ்வளவு சொல்லியும், கிளம்புடா சீக்கிறம் என்று சொல்லி விட்டார். சரி என்று எல்லோரும் புறப்பட்டு வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றோம்.

நாங்கள் சென்று சேர்ந்தபோது மாலை மணி 3:00. கோயில் திறக்க இன்னும் 1:30 மணி நேரம் ஆகும் என்று கூறி விட்டார்கள்.

காத்திருந்தோம், அவ்வேளையில், அங்கிருந்து கடைக்காரர், அர்ச்சனைக்குத் தேவையான பொருள்களை தன் கடையில் வாங்குமாறும், அர்ச்சனையை நல்லபடியாக முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்வதாகவும் கூறினார். எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். கடைக்கு ரூ. 75 ஆகும் எனக்கூறினார்.

அவர் கூறியதை ஏற்று, நாங்கள் கோயிலுக்குள் சென்று அமர்ந்திருந்தோம். மணியும் ஆனது. கோயிலும் திறந்தது. கடைக்காரர், 5 தேங்காய்களுடன் கூடிய தட்டில், அர்ச்சனைக்குத் தேவையான பொருள்களை எடுத்து வந்து எங்களை அழைத்தார். ஒரு ஐயரிடம் சென்று தட்டை வைத்தார்.

அந்த ஐயர், கோயிலின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்தார். எங்களிடம் யார் பெயருக்கு அர்ச்சனை செய்யவேண்டுமெனக் கேட்டார். நான், என் மாமா மகனின் பெயர், ராசி, நட்சத்திரம் எல்லாம் கேட்டதற்கிணங்க கூறினேன்.

அவர், அர்ச்சனையை அங்கேயே முடித்து விட்டார். இப்படி 3 சாமிகளுக்கு அர்ச்சனை முடிந்ததும், இனிமேல் 6 மணிக்குதான் அம்பாளுக்கும், வைதீஸ்வரனுக்கும் அர்ச்சனை செய்ய முடியும், எனவே, இருக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு இருக்கலாம், முடியாதவர்கள், ஊருக்குச் செல்லலாம் என்றும், இதுவரை நடந்த அர்ச்சனைகளுக்கான பழம் தேங்காய்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஐயர் கூறினார்.

நாங்கள் இருந்தோம். எல்லாம் 6 மணிக்கு ஆரம்பமானது. அம்மா, நீ ஒரு அர்ச்சனை செய்துகொள் என்று கூறினார். நானும் ஒரு 3 ரூபாக்கு அர்ச்சனை சீட்டு வாங்கி அதற்கான பொருள்களையும் வாங்கி அர்ச்சனை செய்தேன்.
வேறு ஒரு ஐயர் வந்து, என்னுடைய பைக்கு பதிலாக, வேறு ஒன்றைக் கொடுத்தார். நான் பெற்றுக்கொண்டேன். கொடுக்கும் போது, தட்சணையாக 5 ருபாய் கேட்டார். நான் முடியாது என்று கூறிவிட்டேன்.

என்னைக் கண்டிப்பாகத் திட்டி இருப்பார். பரவாயில்லை.

இதற்கடுத்து, 5 தேங்காய் தட்டு வந்தது. ஐயருக்கு 101 ரூபாய் தட்சணை வைத்துவிட்டு தட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள் கூறினார் கடைக்காரர். மாமாவும் கொடுத்துவிட்டார்.

அடுத்து, என் மனைவிக்கு அங்கு இருந்த சில பொருள்களை வாங்கவேண்டும் என்ற ஆசை. நான் அவளுடன் வளையல் போன்ற பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தேன். அந்த வேளையில், கடைக்காரர் எனது மாமாவிடம், கடைக்கு ரூ 75ம், மாலை, 5 அர்ச்சனை, ஐயர் செலவு என்று ரூ 300 தீட்டிவிட்டார். அவர் கேட்டதைவிட ரூ 225 மேல்.

இப்படி கோயிலுக்குள் ஒரு கொள்ளையே நடக்கின்றது. இங்கு நன்றாக படித்த நாம் (என்னையும் சேர்த்து) கடவுளைப் பற்றி பேசியும், எழுதியும், படிக்காத பாமர மக்களுக்கு இன்னும் மூட நம்பிக்கைகளை உரம்போட்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது வயிறெரிந்தது. அங்கேயே வண்டியை நிறுத்தி ஒரு 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் 5 ரூ அதிகமாக கொடுத்து வாங்கி குடித்தேன்!

வேண்டுகோள்: தயவுசெய்து சாமி கோயிலுக்கு செல்லும் போது, ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், சூடம், பத்தி போன்ற அத்தியாவசியமானதை நீங்களே எடுத்துச் செல்லுங்கள். முக்கியமாக, நவகிரக கோயில்களுக்கு செல்லும்போது மிகவும் கவனமாகச் செல்லுங்கள்.

வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல நினைக்கும் அன்பர்கள், முதலில் 5 தேங்காய்கள், 10 வாழைப் பழங்கள், விபூதி, குங்கும பாக்கெட்டுகள், பூமாலை போன்றவற்றை நீங்களே வாங்கிச் செல்லுங்கள். அத்துடன், அந்த கோயிலில், எடுத்துக்காட்டாக, செவ்வாய் கோயிலில் இருக்கின்ற ஐயரிடம் கொடுத்து, அர்ச்சனை செய்துகொள்ளுங்கள். தட்சணை கொடுக்காதீர்கள். ஆனால், அர்ச்சனை சீட்டு ரூ 3 க்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

இப்படி ஒவ்வொரு சன்னிதானத்திலும் நீங்களே அர்ச்சனை செய்துகொண்டால், ரூ 300 முதல் ரூ 500 வரை மிச்சப் படுத்தலாம்.

7 comments:

Zorro64 said...

Koilukku pogaamale iruukalamillava !!!!!

தமிழ் said...

நீங்க சொல்றது சரிதான்.ஆனால்இன்று மக்கள் மத்தியில் மலிந்து கிடக்கின்ற மூட நம்பிக்கைகளுக்குள் நாம் சென்று கோயிலுக்குப் போகவேண்டாம் என்று சொன்னால், நம்மை அடித்தே கொன்றுவிடுவார்கள். ஆகையால், கோயிலுக்குச் செல்லுபவர்கள், அவர்களே, அவர்களுடைய நீண்ட நாள் சேமிப்புகளை வீணாக்காமல் இருக்க ஒரு அட்வைஸ்!

பித்தன் said...

ஜாதகம் என்பது நமக்கு ஒரு ஜ டி கார்டு மாதிரி, அது எல்லாம் நம்ம பூர்வஜென்ம கர்மங்களுக்கு ஏற்ப அமைவது, எந்த தோஸத்திற்கும் பரிகாரம் கிடையாது, என்ன இருக்கோ அதை நாம் அனுபவித்துதான் ஆகனும். நம்ம நம்பிக்கைகாகதான் கோவிலுக்கு போகிறேம், என்பதை அனைவரும் புரிந்துகொள்ளுங்கள். அது நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலே போதும்.

அப்புறம் அர்ச்சனை சீட்டும், உண்டியல் பணமும் போடாதிங்க, தட்டுல உங்களுக்கு எவ்வளவு புடிக்குதே அதை போடுங்க. இவ்வளவு போடனும் கண்டிசன் பண்ணுனா ஜந்து பைசா கூட போடாதிங்க.

srikamalakkanniamman said...

இப்படி கோயிலுக்குள் ஒரு கொள்ளையே நடக்கின்றது. இங்கு நன்றாக படித்த நாம் (என்னையும் சேர்த்து) கடவுளைப் பற்றி பேசியும், எழுதியும், படிக்காத பாமர மக்களுக்கு இன்னும் மூட நம்பிக்கைகளை உரம்போட்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றோம்

Tavaru tamizh ayya. Swamy nammidam tooimaiyana
Anbaiye edirpaarkiraar. Avar panattaiyo nammidam irukkum porulaiyo edirparkavillai
Idail archargal seida tavaraal neengal iraivanaio baktiyo kurai sollalama.
Naam neradiyaaga koiluku senru iravanai vazhipaduvom en archagargalai edirparka vendum (iraivan archanai seivadai vida nam anbaiye edirparkiraar)
See thiruninravuril oru naayanaar ullatil easanai vaittu poojittar easane arul koduttu antha poojaiei etru kondaar .. ungaluku terindade (irudayaleeswarar temple patri)
Avar ulla kovilil poojikkum podu enda panatai selavu seidaar. Iraivan koduta anbaiye avar iraivanukku koduttar. (idaipatta archagargalukkagavum poli saamiyaargalaalum baktiyaiyum iravanaiyum koilgalaiyum pazhikalaama .azhvaargal paasurangalai panattai selavitta paasurangali paadi iraivanai magizhvittargal… sollungal… iraivan kodutta kaalgalal nadandu avar kodutta anbai selavittu ,.. …taane….

தமிழ் said...

நன்றி திரு. பித்தன். உங்கள் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

தமிழ் said...

திரு கமலக்கண்ணியம்மன், வாங்க, இங்கேயும் வந்து உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

நான் கடவுள் இருக்கின்றார்,அல்லது இல்லை என்றெல்லாம் வாதிடுபவன் அல்ல. நாம், நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள சூழல் பற்றியும் என்று சிந்திக்க ஆரம்பிக்கின்றோமோ அன்றே கடவுள் நம்மில் வந்து விடுகின்றார். இது நான் கூறியது.

அன்பும், அறவனைப்பும் உள்ள எந்த மக்களும், மாக்களும் கடவுள்தான், என் அகராதியில்.

நீங்கள் மற்றவர்களிடத்தில் அன்பாக இருக்கும்போது, கடவுள் அன்பானவர் என்ற எண்ணம் தோன்றுகின்றதல்லவா? அப்போது நீங்கள்தான் கடவுள். இது உளவியல் உண்மை.

திரு பித்தன் கூறியது போல், காசுக்கு கடவுள் என்றால், அப்படி ஒன்று எனக்குத் தேவையில்லை, இது என் கருத்து.

srikamalakkanniamman said...

நன்றி தமிழ் அவர்களே நல்ல கருத்து

அன்பே சிவம் !!!!